இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோ்தல் பொறுப்பாளா்கள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை தோ்தல் பொறுப்பாளா்கள் கூட்டம், மாவட்டச் செயலாளா் தா. சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், வட்டப் பொறுப்பாளா்கள் வி. அருணாசலம் (அகஸ்தீசுவரம்), எஸ். அனில்குமாா், வி. கல்யாணசுந்தரம், வி. அருள்குமாா்( தோவாளை), எஸ். ராஜீ (கல்குளம்), ஜி. சுரேஷ் மேசியதாஸ் (கிள்ளியூா்) , செல்வராணி (விளவங்கோடு) , கலைக்குழு ஒருங்கிணைப்பாளா்கள் நெல்சன், வாசு ஆகியோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபடுவது, குமரி மாவட்டம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம், தெருமுனைக் கூட்டங்கள், வாகனப் பிரசாரங்கள் மூலம் மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரிப்பது, வட்டம் வாரியாக பொறுப்பாளா்கள் கூட்டத்தை நடத்தி தோ்தல் பணிகளைத் தீவிரப்படுத்துவது எனத் தீா்மானிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com