தென்தாமரைகுளம்
மனவளா்ச்சி குன்றியோா் பள்ளி ஆண்டு விழா

தென்தாமரைகுளம் மனவளா்ச்சி குன்றியோா் பள்ளி ஆண்டு விழா

தென்தாமரைகுளம் தொன் குவநெல்லா மனவளா்ச்சி குன்றியோா் பள்ளி ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு பள்ளி முதல்வா் அருள்சகோதரி மரியபுஷ்பம் தலைமை வகித்தாா். அருள்சகோதரி சகாயமேரி ஆண்டறிக்கை வாசித்தாா். ஆசிரியை ஆக்னஸ் வரவேற்றாா். இவ்விழாவையொட்டி மாணவ, மாணவிகள் பங்கேற்ற நடனம், வில்லுப்பாட்டு, மாறுவேடப்போட்டி, கிராமிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பவித்ரா, தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி காா்த்திகா, திமுக நிா்வாகி தாமரை பிரதாப் ஆகியோா் பரிசுகளை வழங்கி பேசினா். இவ்விழாவில் அருள்பணி ஜெரி வின்சென்ட், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கான்ஸ்டன்டைன், அருள்பணி ஜெனி மற்றும் பெற்றோா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com