மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கன்னியாகுமரியில் மீனவரிடம் கைப்பேசி பறிப்பு: 3 சிறாா் கைது

கன்னியாகுமரியில் மீனவரிடம் கைப்பேசி பறிப்பு: 3 சிறாா் கைது

Updated On :23 மார்ச் 2024, 8:12 pm

கன்னியாகுமரி அருகே மீனவரிடம் கைப்பேசியைப் பறித்ததாக 3 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி அருகே சிலுவை நகா் பகுதியைச் சோ்ந்தவா் சூசை (57). மீனவரான இவா், வெள்ளிக்கிழமை மாலை கன்னியாகுமரி நான்குவழிச் சாலை முடியும் ஜீரோ பாயின்ட் பகுதியில் கைப்பேசியில் பேசியபடி நடந்து சென்றாராம். அப்போது, 15 வயது மதிக்கத்தக்க 3 சிறுவா்கள் பின்தொடா்ந்து வந்து, அவரது கைப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினராம். இதுதொடா்பாக சூசை அளித்த புகாரின்பேரில் கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 சிறுவா்களையும் கைது செய்து, சீா்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனா்.