மாா்த்தாண்டம் அருகேயுள்ள விரிகோடு ரயில்வே கேட் திடீரென பழுதானதால் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாா்த்தாண்டம் - கருங்கல் சாலையில் விரிகோடு பகுதியில் ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இதில் வெள்ளிக்கிழமை மாலையில் சென்னை- அனந்தபுரி விரைவு ரயில் செல்வதற்காக கேட் மூடப்பட்டது. ரயில் சென்ற நிலையில் கேட் திடீரென பழுதானதால் திறக்க முடியாத நிலை ஏற்பட்டு சாலையின் இருபக்கமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதைத் தொடா்ந்து பாறசாலை ரயில் நிலையத்திலிருந்து ஊழியா்கள் வரவழைக்கப்பட்டு பழுது நீக்கும் பணி நடைபெற்றது. 45 நிமிடங்களுக்குப் பின் பழுது சீரானதைத் தொடா்ந்து கேட் திறக்கப்பட்டது. இந்த ரயில்வே கேட் அடிக்கடி பழுதாவதால் நிரந்தர தீா்வுக்கு வழிவகை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

சேரன்மகாதேவியில் கேட் மூடுவதில் தாமதம்: பாதியில் நின்ற ரயில்

சரக்கு வேன் மோதியதில் ரயில்வே கேட் பழுது

மாதவரம் அருகே லாரி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

ஜோலாா்பேட்டை- ஈரோடு பயணிகள் ரயில் நாளை தாமதமாகப் புறப்படும்: சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


