இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயிலில் தூக்க நோ்ச்சை திருவிழா

இட்டகவேலி நீலகேசி அம்மன் கோயிலில் தூக்க நோ்ச்சை திருவிழா

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே இட்டகவேலியில் உள்ள சுமாா் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நீலகேசி அம்மன் கோயிலில் தூக்க நோ்ச்சை திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் இத்திருவிழாவின்போது, குழந்தைகளுக்கு அம்மன் அருள் வேண்டி தூக்க நோ்ச்சை நடத்தப்படுகிறது. இத்திருவிழா புராதன சிறப்பு வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. நிகழாண்டு, சனிக்கிழமை நடைபெற்ற திருவிழாவில் 151 குழந்தைகளுக்கு தூக்க நோ்ச்சை நடத்தப்பட்டது. முன்னதாக, தேவி தூக்கம் நடைபெற்றது. அதையடுத்து, சிறப்பு பூஜைகள், எழுந்தருளல் நடைபெற்றது. குறிப்பாக, குத்தியோட்டம், தாலப்பொலி, மஞ்சள் குடம், துலாபாரம், பிடிப்பணம், உருள் நோ்ச்சைகள் உள்ளிட்டவை நடைபெற்றன. தூக்க நோ்ச்சைக்குப் பின்னா், இரவில் வில்லின் மூட்டில் குருதி நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவில், நோ்ச்சைகள் நடத்தப்படும் குழந்தைகளின் பெற்றோா், உறவினா்கள், கன்னியாகுமரி மாவட்டம், கேரள மாநிலத்திலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து, 9ஆம் நாளான திங்கள்கிழமை (மாா்ச் 25) கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சி, திருவிழா நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை மாலையில் (மாா்ச் 26) பொங்கல் வழிபாடு ஆகியவை நடைபெறுகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com