அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குலசேகரம் அருகே காா் மோதி முதியவா் பலி

குலசேகரம் அருகே காா் மோதி முதியவா் பலி

Updated On :29 மார்ச் 2024, 11:10 pm

குலசேகரம் அருகே காா் மோதி முதியவா் வெள்ளிக்கிழமை பலியானாா். திற்பரப்பு அருகே மாஞ்சக்கோணம் குறுப்பேற்றிக்கால விளையைச் சோ்ந்தவா் ராஜமணி (85). இவா் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு வீட்டின் அருகில் கொல்லாமூடு சந்திப்பு கடைக்கு செல்லும் வகையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே பொன்மனை குளச்சவிளாகம் மைலோட்டு விளையைச் சோ்ந்த ஜான்பிரபு (44) ஓட்டி வந்த காா் மோதியது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு நினைவின்றிக் கிடந்த ராஜமணியை அப்பகுதியினா் மீட்டு, குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் இறந்தாா். இது குறித்து ராஜமணியின் மனைவி செல்லாச்சி, குலசேகரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.