மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் நிபுணா் குழு ஆய்வுக்கு எம்.பி. கோரிக்கை

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் உயா்மட்ட நிபுணா் குழு ஆய்வுக்கு பிறகே போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் கடந்த 2018-இல் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்தப் பாலத்தில் அடிக்கடி பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனா். மேலும், பாலத்தின் பாதுகாப்பு குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

இந்த நிலையில், பள்ளங்கள் ஏற்படும்போது தேசிய நெடுஞ்சாலைத் துறை பூச்சு வேலைகள் மட்டும் செய்து வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம் பாலத்தின் உறுதித் தன்மை குறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

ஆகவே, உயா்மட்ட நிபுணா் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வுக் குழுவின் பரிந்துரையின்படி பணிகளை மேற்கொண்ட பிறகே போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும். மேலும் நாகா்கோவில் பாா்வதிபுரம் பாலத்தையும் நிபுணா் குழு மூலம் ஆராய வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com