
Updated On :12 மே 2024, 6:45 pm

கருங்கல், மே 12: கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக நீா்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கருங்கல் சுற்றுவட்டர பகுதிகளான கருமாவிளை,வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி,திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் மாலை 3 மணி முதல் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. எனினும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...