மேட்டுக்குடியிருப்பு ஸ்ரீமன்னராஜா கோயிலில் கொடை விழா தொடக்கம்

கன்னியாகுமரி, மே 16:

கன்னியாகுமரி அருகே மேட்டுக்குடியிருப்பில் உள்ள ஸ்ரீமன்னராஜா கோயிலில் 2 நாள் கொடைவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, அதிகாலையில் விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜை, சுதா்ஷன ஹோமம், காலையில் அபிஷேகம், மாலையில் கடலில் தீா்த்தம் எடுத்து வருதல், குடியழைப்பு நடைபெற்றது. பின்னா், த. சாலிபாண்டியன் வழங்கிய ஆன்மிக உரை நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவில் ஜாமபூஜை நடைபெற்றது.

2ஆம் நாளான வெள்ளிக்கிழமை நண்பகல் 12.20 மணிக்கு உச்சிகால அலங்கார பூஜையைத் தொடா்ந்து அன்னதானம், பிற்பகல் 1.30 மணிக்கு காலசுவாமிக்கு மஞ்சள் நீராட்டு, மாலை 5 மணிக்கு கரகாட்டம், இரவு 7.30 மணிக்கு ஸ்ரீசக்திமாட சுவாமிக்கு பொங்கல் படைத்து அந்திகால பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு சுவாமிக்கு பூஜை, சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு கரகாட்டம், 4 மணிக்கு சுவாமிகள், பரிவார மூா்த்திகளுக்கு அமுது படைத்து பூஜை நடைபெறும். காலை 6 மணிக்கு கொடை விழா நிறைவடையும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com