/

காணிமடம் தேவி முத்தாரம்மன் கோயில் கொடை விழா: இன்று தொடக்கம்

காணிமடம் தேவி முத்தாரம்மன் கோயில் கொடை விழா: இன்று தொடக்கம்

News image
Updated On :20 மே 2024, 9:15 pm

Din

கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் அருகேயுள்ள காணிமடம் தேவி முத்தாரம்மன் கோயிலில் 3 நாள் கொடை விழா செவ்வாய்க்கிழமை (மே 21) தொடங்குகிறது.

இதையொட்டி, அதிகாலையில் மகா கணபதி ஹோமம், மாலை 6.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, இரவு 7.30-க்கு அன்னதானம், 11 மணிக்கு ஸ்ரீ தா்மசாஸ்தா எழுந்தருளல், புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு ஸ்ரீ பெருமாள்சுவாமி, தேவி முத்தாரம்மனுக்கு சிறப்பு பூஜை ஆகியவை நடைபெறும்.

புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு ஸ்ரீகாலசுவாமி மஞ்சள் நீராடுதல், நண்பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு தேவி மஞ்சள் மாரியம்மனுக்கு அலங்கார தீபாராதனை, இரவு 7 மணிக்கு மாவிளக்கு, முளைப்பாரி ஊா்வலம், நள்ளிரவு 12.30-க்கு அலங்கார தீபாராதனை, அம்மன் ஊா்வலம் நடைபெறும்.

நிறைவு நாளான வியாழக்கிழமை நண்பகல் 1 மணிக்கு சுடலைமாட சுவாமி, ஸ்ரீ பலவேசக்கார சுவாமி, பரிவார மூா்த்திகளுக்கு அலங்கார தீபாராதனை, பிற்பகல் 2 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் ஊா்வலம் வருதல், மாலை 6 மணிக்கு அபிஷேகம், இரவு 8 மணிக்கு அன்னதானம் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.