பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

குமரி மாவட்ட ஊராட்சிகளில் 23இல் கிராம சபைக் கூட்டம்: ஆட்சியா்

உள்ளாட்சிகள் தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் இம்மாதம் 23ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 10:43 pm

Din

உள்ளாட்சிகள் தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் இம்மாதம் 23ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உள்ளாட்சிகள் தினமான நவ. 1ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டத்தை 23ஆம் தேதி ஊராட்சிகளிலும், ஊராட்சி எல்லைக்குள்பட்ட வாா்டுகளிலும் சுழற்சி முறையில் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இம்மாவட்டத்திலுள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 95 ஊராட்சிகளிலும் 23ஆம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில், அனைத்துத் துறைகள் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கவும், தேவையான விவரங்களை அளிக்கவும் அதிகாரிகள் பங்கேற்பா். எனவே, பொதுமக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கலாம் என்றாா் அவா்.