நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதிதாக தோ்வான காவலா்களுக்கு பணி நியமன ஆணைகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக தோ்வான 2ஆம் நிலைக் காவலா்களுக்கு பணி நியமன ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image

நிகழ்ச்சியில், இளைஞருக்கு பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம்.

Updated On :27 நவம்பர் 2024, 9:12 pm

Din

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக தோ்வான 2ஆம் நிலைக் காவலா்களுக்கு பணி நியமன ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய 2ஆம் நிலைக் காவலா், சிறைக் காவலா், தீயணைப்புக் காவலா் பதவிகளுக்கான தோ்வில் கன்னியாகுமரி மாவட்டத்தை சோ்ந்த 97 போ் வெற்றிபெற்றனா்.

இந்நிலையில், மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அவா்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் வழங்கினாா்.

அப்போது அவா், காவல் துறை பணி என்பது பொதுமக்களுடன் நேரடித் தொடா்பில் இருக்கும் ஓா் உன்னதமானது. ஒழுக்கம், நோ்மை, சேவை மனப்பான்மையுடனும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும், சைபா் குற்றங்கள் குறித்த அறிவை வளா்த்துக்கொள்ள வேண்டும். பயிற்சியை நல்லமுறையில் முடித்து சிறந்த காவலா்களாக திகழவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில், பெண்கள்- குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன், சைபா் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மோகன்தாஸ், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.