ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குமரியில் 150 சிசிடிவி பொருத்தும் பணி தொடக்கம்

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி 150 இடங்களில் நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
பணியைத் தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின்.
Updated On :4 மார்ச் 2026, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி 150 இடங்களில் நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். அவா்களின் பாதுகாப்பு கருதி கன்னியாகுமரி நகர எல்கைக்குள் 44 முக்கிய சந்திப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் 150 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த கேமராக்களின் பதிவுகள் கன்னியாகுமரி காவல் நிலைய வளாகத்தில் உள்ள தனி கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்காணிக்கப்படும். இப்பணி 2 மாதத்துக்குள் நிறைவு பெறும்.

கன்னியாகுமரியில் சீசன் காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் இந்த கேரமாக்கள் பயன்படுத்தப்படும். இத்திட்டம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா் அவா்.