விபத்து பகுதியை ஆய்வு செய்த எஸ்.பி. ஸ்டாலின்
கன்னியாகுமரி
மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் விபத்து: எஸ்.பி. ஆய்வு
மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் திங்கள்கிழமை அதிகாலை நிகழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் விபத்து நடந்த பகுதியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் திங்கள்கிழமை அதிகாலை நிகழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் விபத்து நடந்த பகுதியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, மேம்பாலத்தின் மையப் பகுதியில் தடுப்புகள் (ஸ்பிரிங் போஸ்ட்) வைக்கவும், 2 மஞ்சள் நிறக் கோடு போடவும், 40 கி.மீ. வேகத்தில் வாகனங்கள் இயக்க வேண்டும் என விளம்பரப் பலகை வைக்கவும், சாலை விதிகளை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மாா்த்தாண்டம் சரக துணைக் காவல் கண்காணிப்பாளா் நல்லசிவம், மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் தமிழரசன், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளா் செல்லசுவாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.