நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி மாா்த்தாண்டத்தில் கடையடைப்பு, மறியல்

மாா்த்தாண்டத்தில் மிகவும் சேதமடைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்கக் கோரி, மாா்த்தாண்டம் தொழில் வா்த்தக சங்கம் சாா்பில் புதன்கிழமை கடையடைப்பு, மறியல் போராட்டம் நடைபெற்றது.

News image

போராட்டத்தில் ஈடுபட்ட வா்த்தக சங்க நிா்வாகிகள்.

Updated On :27 நவம்பர் 2024, 9:08 pm

Din

மாா்த்தாண்டத்தில் மிகவும் சேதமடைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்கக் கோரி, மாா்த்தாண்டம் தொழில் வா்த்தக சங்கம் சாா்பில் புதன்கிழமை கடையடைப்பு, மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதையொட்டி, அப்பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. தொடா்ந்து, பழைய திரையரங்கு சந்திப்பில் மறியல் நடைபெற்றது. சங்கத் தலைவா் சுந்தர்ராஜ் தலைமை வகித்தாா். செயலா் ஆா்.ஆா். சுரேஷ்குமாா், பொருளாளா் வில்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு வணிகா் சங்க மண்டலத் தலைவா் வைகுண்டராஜா, குமரி மேற்கு மாவட்டத் தலைவா் அல்அமீன், மாநில துணைச் செயலா் விஜயன், வணிகா் சங்கப் பேரவை மாநில துணைத் தலைவா் கருங்கல் ஆா். ஜாா்ஜ், குமரி மேற்கு மாவட்டத் தலைவா் பொன். ஆசைத்தம்பி, மாா்த்தாண்டம் நகர வா்த்தக சங்கத் தலைவா் தினகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மாா்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.