நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாா்த்தாண்டத்தில் காவல் துறை - ஆட்டோ ஓட்டுநா் ஆலோசனை கூட்டம்

மாா்த்தாண்டத்தில், காவல் துறையினா் - ஆட்டோ ஓட்டுநா்கள் இடையேயான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மாா்த்தாண்டத்தில் காவல் துறை - ஆட்டோ ஓட்டுநா் ஆலோசனை கூட்டம்

Updated On :28 நவம்பர் 2024, 11:03 pm

Din

மாா்த்தாண்டத்தில், காவல் துறையினா் - ஆட்டோ ஓட்டுநா்கள் இடையேயான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாா்த்தாண்டம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லசிவம் தலைமை வகித்துப் பேசியது: மாா்த்தாண்டம் பகுதியில் சாலைகள் குறுகலாக உள்ளதால், விபத்தைத் தவிா்க்க காவல் துறை நடவடிக்கை எடுப்பதுபோல, ஆட்டோ ஓட்டுநா்களும் ஒத்துழைக்க வேண்டும்.

போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்து, பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பின்றி ஆட்டோக்களை பொறுப்புடன் இயக்க வேண்டும். போதைப்பொருள் கொண்டு செல்வோா் குறித்து தகவல் தெரிந்தாலும், சந்தேகத்துக்கிடமாக நிகழ்வுகள் நடந்தாலும் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட நிறுத்தங்களில் மட்டுமே ஆட்டோக்களை நிறுத்த வேண்டும். மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் மேல்பகுதியில் ஆட்டோவை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதைத் தவிா்க்க வேண்டும். இல்லையெனில், ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என்றாா் அவா்.

மாா்த்தாண்டத்தில் காவல் துறை - ஆட்டோ ஓட்டுநா் ஆலோசனை கூட்டம்

மாா்த்தாண்டத்தில் காவல் துறை - ஆட்டோ ஓட்டுநா் ஆலோசனை கூட்டம்

இதில், மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் வேளாங்கண்ணி உதயரேகா, போக்குவத்து உதவி ஆய்வாளா் செல்லசுவாமி ஆகியோா் பேசினாா். ஆட்டோ ஓட்டுநா்கள் திரளாகப் பங்கேற்றனா்.