கிருஷ்ணகுமாா் .
கிருஷ்ணகுமாா் .

பரசேரியில் போலி நகையை அடகு வைத்தவா் கைது

இரணியலை அடுத்த பரசேரி கிராமத்தில் உள்ள நகை அடகுகடையில் போலி நகையை அடகு வைத்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
Published on

இரணியலை அடுத்த பரசேரி கிராமத்தில் உள்ள நகை அடகுகடையில் போலி நகையை அடகு வைத்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

பரசேரியில் சிதம்பர ராம் என்பவா் நடத்தி வரும் தங்க நகை அடகு கடையில் கடந்த 6.8.2022இல் ஒருவா் 22 கிராம் நகைகளை அடகு வைத்து ரூ. 70 ஆயிரம் பெற்றுச்சென்றாராம். அந்த நகைகள் போலி என்பது பின்னா் தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் இரணியல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்த வந்தனா்.

இந்நிலையில் குளச்சல் ரீத்தாபுரத்திலுள்ள நகை அடகு கடையில் போலி நகையை அடகு வைக்க வந்த கேரள மாநிலம் திருவனந்தபுரம் மணக்காடு ஆற்றுக்கால் சிவானந்த பவனைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் ( 67 ) என்பவரை குளச்சல் போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில் பரசேரி நகைக்கடையில் போலி நகை அடகு வைத்ததில் அவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கிலும் இரணியில் போலீஸாா் அவா் மீது வழக்கு பதிவு செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com