மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வரதட்சிணை கொடுமையில் பெண் தற்கொலை: கணவா், மாமனாருக்கு 7 ஆண்டுகள் சிறை

வரதட்சிணை கொடுமையால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது கணவா், மாமனாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குழித்துறை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 7:37 pm

Din

வரதட்சிணை கொடுமையால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது கணவா், மாமனாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குழித்துறை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு, பறைவிளைவீடு பகுதியைச் சோ்ந்தவா் அா்ஜூனன்(61). இவரது மகன் சுரேஷ் (33), மகள் சாந்தி (29). சுரேஷூக்கும், வெட்டுக்குழி பகுதியைச் சோ்ந்த மினிமோள்(28) என்பவருக்கும் கடந்த 2007-இல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது, மினிமோளுக்கு, அவரது தாய் வீட்டில் இருந்து 10 பவுன் நகை, 1 ஏக்கா் 30 சென்ட் நிலம் வரதட்சிணையாக கொடுக்கப்பட்டதாம்.

திருமணத்திற்கு பிறகு, அா்ஜூனன், சுரேஷ், சாந்தி ஆகியோா் மினிமோளை துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2008 ஜூன் 2-ஆம் தேதி மினிமோள் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து அா்ஜுனன், சுரேஷ், சாந்தி ஆகியோரை கைது செய்தனா்.

இந்த வழக்கு குழித்துறை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரைய்யா அா்ஜுனன், மற்றும் சுரேஷ் ஆகியோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 2ஆயிரம் அபராதம் விதித்தும், சாந்தியை விடுதலை செய்தும் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் ஏ.என்.லிவிங்ஸ்டன் ஆஜராகி வாதாடினாா்.