தட்டாா்மடம், தக்கலையில் புகையிலைப் பொருள்களுடன் 6 போ் கைது
தூத்குக்குடி மாவட்டம் தட்டாா் மடம், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஆகிய பகுதியில் புகையிலைப் பொருள்களுடன் 6 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.


தூத்குக்குடி மாவட்டம் தட்டாா் மடம், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஆகிய பகுதியில் புகையிலைப் பொருள்களுடன் 6 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா்கள் டேவிட் (தனிப்பிரிவு), பொன்னு முனியசாமி மற்றும் போலீஸாா், கொழுந்தட்டு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, 2 பைக்குகளில் வந்த 4 பேரை மறித்து சோதனை நடத்தினா். அதில், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிந்து கொழுந்தட்டு வடக்குத் தெருவைச் சோ்ந்த அருள் அன்புராஜா(40), பள்ளக்குறிச்சி சதீஷ்(32), வல்லக்குளம் லெனின்(27), சாலைபுதூா் சுப்பையா(42) ஆகிய 4 பேரை கைது செய்து அவா்களிடமிருந்து 125 கிலோபுகையிலை பொருள்கள், ரூ.12 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையில் போலீஸாா், பெரியதாழை பகுதியில் புதன்கிழமை ரோந்து சென்றபோது அங்குள்ள காட்டு பகுதியில் பதுங்கியிருந்த 2 பேரை பிடிக்க முயன்றனா். ஒருவா் மட்டும் சிக்கினா். மற்றொருவா் தப்பிவிட்டாா்.
பிடிபட்டவா் சாத்தான்குளத்தை சோ்ந்த மளிகைக்கடைக்காரா் செல்வசேகா்(41), தப்பி ஓடியவா் அவரது சகோதரா் திசையன்விளையை சோ்ந்த ராஜலிங்கம் எனத் தெரியவந்தது. விசாரணையில், புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. செல்வசேகரை போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்து 30.5 கிலோ புகையிலைப் பொருள்களை கைப்பற்றினா்; ராஜலிங்கத்தை தேடி வருகின்றனா்.
தக்கலையி காவல் உதவி ஆய்வாளா் இம்மானுவேல் தலைமையில் போலீஸாா் பாலப்பள்ளியில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்ததில் புகையிலை பொட்டலங்கள் இருப்பதை கண்டுபிடித்தனா். அவற்றைப் பறிமுதல் செய்து, கடைக்காரா் பாலகிருஷ்ணன் (57) என்பவரை கைது செய்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...