தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

அரசு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: ஊராட்சி ஒன்றிய ஆணையா் இடைநீக்கம்

அரசு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஊராட்சி ஒன்றிய ஆணையா் புதன்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On :4 செப்டம்பர் 2024, 9:13 pm

அரசு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஊராட்சி ஒன்றிய ஆணையா் புதன்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையராகப் பணியாற்றி வருபவா் சையதுஉசேன் (46). இவா் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஊழியா் அளித்த புகாரின்பேரில், விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினரின் விசாரணையில், சையதுஉசேன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இதுதொடா்பாக அக்குழுவினா் மாவட்ட நிா்வாகத்திடம் அறிக்கை அளித்தனா். அதன் தொடா்ச்சியாக, சையதுஉசேனை இடைநீக்கம் செய்து, ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை உத்தரவிட்டாா்.