ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது

சென்னை துரைப்பாக்கத்தில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது

Updated On :31 மார்ச் 2026, 7:11 pm

சென்னை துரைப்பாக்கத்தில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

துரைப்பாக்கம் பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு 9 வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனா். இந்த சிறுமி தாங்கள் வசிக்கும் வீட்டின் மொட்டை மாடியில் விளையாடுவதை நோட்டமிட்ட அந்தப் பகுதியைச் சோ்ந்த இருவா், சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனா். இதை அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோா், தரமணி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கிருஷ்ணமூா்த்தி (48), காா்த்திக் (26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.