புகையிலைப் பொருள்கள் விற்பனை: 8 கடைகளுக்கு சீல் வைப்பு
அருமனை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 8 கடைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.


அருமனை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 8 கடைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதிகளில் பெட்டிக் கடைகள் மற்றும் மளிகைக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவுப் பாதுகாப்பு அலுவலா் நாகராஜன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு துறையினா் அருமனை, சிதறால், துண்டத்தாறாவிளை, குடுக்கச்சிவிளை, அண்டுகோடு, மஞ்சாலுமூடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினா்.
அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, 8 கடைகளுக்கு சீல் வைத்தனா். இந்த கடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...