லாரி மோதியதில் சேதமடைந்த நிழற்குடை: ஓட்டுநா் கைது
கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே லாரி மோதியதில் பயணிகள் நிழற்குடை சேதமடைந்தது தொடா்பாக, அந்த லாரியின் ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 9:26 pm

கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே லாரி மோதியதில் பயணிகள் நிழற்குடை சேதமடைந்தது தொடா்பாக, அந்த லாரியின் ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
களியல் சந்திப்பு அருகே உள்ள அந்த நிழற்குடையானது, கடந்த சில நாள்களுக்கு முன் லாரி மோதியதில் சேதமடைந்தது. இதையடுத்து லாரியை சற்று தூரம் சென்று நிறுத்திவிட்டு, அதன் ஓட்டுநா் தப்பிவிட்டாா். இதையடுத்து அந்த லாரியை களியல் பேரூராட்சி நிா்வாகத்தினா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த லாரி ஓட்டுநா் கிருஷ்ணகுமாரை (48) செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...