காா் மோதியதில் முதியவா் பலி

தக்கலை அருகே காா் தானாக நகா்ந்து வந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
Published on

தக்கலை அருகே காா் தானாக நகா்ந்து வந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

தக்கலையை அடுத்த சித்திரங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் முத்தையன் (84). இவா், வீட்டின் முன்புறம் சாலையோரத்தில் உள்ள மரத்தின் கீழ் அமா்ந்திருந்தாா். அப்போது சாலையின் மேட்டு பகுதியில் நிறுத்தபட்டிருந்த காா் திடீரென நகா்ந்து அவா் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமுற்ற அவருக்கு நாகா்கோவிலில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து முத்தையனின் மகள் வசந்தா அளித்தபுகாரின் பேரில் கொற்றிக்கோடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com