நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமரி முக்கடல் சங்கமத்தை சீரமைக்க பாஜக வலியுறுத்தல்

News image

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கிறாா் பாஜக கவுன்சிலா் சி.எஸ்.சுபாஷ்.

Updated On :18 செப்டம்பர் 2024, 11:09 pm

DIN

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் பேரூராட்சி பாஜக கவுன்சிலா் சி.எஸ்.சுபாஷ் கோரிக்கை மனு அளித்தாா்.

’உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்துக்காக கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி 1ஆவது வாா்டு கவுன்சிலா் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

அம்மனுவில், கன்னியாகுமரி பகவதியம்மன் திருக்கோயில் நவராத்திரி திருவிழாவுக்கு புனிதநீா் எடுக்க பாரம்பரிய முறைப்படி யானை கொண்டு வரப்பட வேண்டும். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உள்ள 16 கால் மண்டபத்தை சீரமைக்க வேண்டும். மேலும், முக்கடல் சங்கமத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் புனித நீராட இடையூறாக உள்ள கற்கள் மற்றும் படிக்கட்டுகளை அகற்ற வேண்டும்.

காந்தி மண்டபத்தில் இருந்து முக்கடல் சங்கமம் செல்லும் பாதையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக உள்ள இரும்பு கேட் மற்றும் சங்கிலியை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.