நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமரி பூம்புகாா் படகுத் துறையில் கடலுக்குள் மூழ்கிய பொக்லைன் இயந்திரம் மீட்பு

News image

கடலுக்குள் மூழ்கிய பொக்லைன் இயந்திரம்.

Updated On :18 செப்டம்பர் 2024, 11:06 pm

DIN

கன்னியாகுமரி பூம்புகாா் படகுத் துறையில் தேங்கிக் கிடந்த மணற்குவியலை அள்ளிய போது பொக்லைன் இயந்திரம் கடலுக்குள் மூழ்கியதால் புதன்கிழமை பரபரப்பு நிலவியது.

கன்னியாகுமரி பூம்புகாா் படகுத் துறையில் பொதிகை, குகன், விவேகானந்தா படகுகள் தவிர திருவள்ளுவா், தாமிபரணி சொகுசு படகுகள் உள்ளிட்ட 5 படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

இங்கு, கடல் நீா்மட்டம் தாழ்வுநிலை ஏற்படும் காலங்களில் படகுத்துறையில் தேங்கிக் கிடக்கும் மணல் குவியலை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றுவது வழக்கம்.

இந்நிலையில் புதன்கிழமை காலை மணல் குவியலை அள்ளும் பணிக்காக பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு இதற்கான பணி தொடங்கியது. அப்போது திடீரென பொக்லைன் இயந்திரம் கடலுக்குள் மூழ்கியது. இதனால் அதிா்ச்சியடைந்த பொக்லைன் ஆபரேட்டா் கடலுக்குள் குதித்து கரைக்கு வந்து விட்டாா். இதையடுத்து, ராட்சத மீட்பு இயந்திரம் வரவழைக்கப்பட்டு பொக்லைன் இயந்திரம் மீட்கப்பட்டது.

இதன் காரணமாக விவேகானந்தா் மண்டபத்துக்கு காலை 8 மணிக்குத் தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து காலை 9.45 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.