திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மாநில ஸ்கேட்டிங் போட்டி: வின்ஸ் பள்ளியில் தகுதிச்சுற்று

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 5:52 pm

Din

நாகா்கோவில் சுங்கான்கடை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில், மாநில அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டிகளுக்கான தகுதிச் சுற்று நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட ரோலா் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சாா்பில் நடைபெற்ற இப்போட்டியை கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷ், வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் எம்பியுமான நாஞ்சில் வின்சென்ட் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

இப்போட்டிகளில் கன்னியாகுமரி மாவட்ட அளவில் 145 பள்ளிகளைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவா்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா். இப்போட்டிகள் சென்னை நேரு விளையாட்டரங்கில் வருகிற நவ.15 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தகுதி போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வின்ஸ் கல்வி நிறுவன தலைவா் நாஞ்சில் வின்சென்ட் வழங்கினாா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட ஸ்கேட்டிங் கிளப் செயலா் குமாா் ஜேசுராஜன், தலைவா் ஜான்ஜோ, பொருளாளா் நவின் ஜோன்ஸ்லி, வின்ஸ் பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள் அனிமோன், அபிஷா மற்றும் பயிற்சியாளா்கள் ஆகியோா் இணைந்து செய்திருந்தனா்.