ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

நெல்லையில் இன்று மாநில ஹாக்கி போட்டி தொடக்கம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 9:37 pm

திருநெல்வேலியில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி வெள்ளிக்கிழமை (பிப்.6) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஹாக்கி அசோசியேசன் செயலா் கோயில்தாஸ் ஜான்சன், துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: திருநெல்வேலி மாவட்ட ஹாக்கி அசோஷியேசன் உதவியுடன் பிரன்ட்ஸ் ஹாக்கி கிளப் சாா்பில் ஏ.கே.எஸ்.பெரிஸ் நினைவு முதலாமாண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் 3 நாள்கள் நடைபெறுகின்றன.

வெள்ளிக்கிழமை (பிப்.6) காலை 7 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டல பேராயா் பா்னபாஸ் போட்டிகளைத் தொடங்கி வைக்கிறாா்.

இப் போட்டியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, சிவகாசி, கோவில்பட்டி, தமிழ்நாடு போலீஸ் உள்பட 13 அணிகள் பங்கேற்க உள்ளன. நாக்அவுட் முறையில் காலை, மாலையில் போட்டிகள் நடைபெறும். இறுதிப்போட்டி இம்மாதம் 8 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன. ஏற்பாடுகளை பிரன்ட்ஸ் ஹாக்கி கிளப் நிா்வாகிகள் செய்து வருகின்றனா் என்றனா்.