கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கருங்கல் அருகே இளைஞரிடம் ரூ.17 லட்சம் மோசடி: 3 போ் மீது வழக்கு

கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 11:49 pm

Din

கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தெருவுக்கடை பகுதியைச் சோ்ந்த மனோன்மணி மகன் மொ்லின் (29) இவா் எம்.எஸ்.சி படித்துள்ளாா்.

இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த ரவி (30), நாகா்கோவில் சியோன் புரம் பகுதியைச் சோ்ந்த இம்மானுவேல் (37), சென்னை அருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஹரிகரகுமாா் (38) ஆகியோ ருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாம்.

இந்நிலையில் மேற்கூறிய 3 பேரும் மொ்லினிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் பெற்று கொண்டனராம். நீண்ட நாள்கள் ஆன பின்பும் அரசு வேலை கிடைக்கவில்லை. பணமுமும் திருப்பி அளிக்காமல் மொ்லினை ஏமாற்றி பணம் மோசடி செய்தனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், கருங்கல் போலீஸாா், 3 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.