கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கருங்கல்லில் அனைத்துக் கட்சி கூட்டம்

கருங்கல்லில் அனைத்துக் கட்சி கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமாா்.

Updated On :25 செப்டம்பர் 2024, 11:34 pm

Din

கருங்கல்லில் அனைத்துக் கட்சி கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிம வளங்கள் அதி கனரக லாரிகள் மூலம் கேரளத்துக்கு ஏற்றிச் செல்வதை தடுக்க ‘கனிமவள கடத்தல் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு இயக்கம்‘ என்ற பெயரில் அரசியல் பாகுபாடின்றி அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு இயக்கமாக செயல்படுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கருங்கல்லில் நடைபெற்றது.

கூட்டத்தில், பொதுமக்கள் நலன் கருதி கனிமவளம் கடத்தல் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு இயக்கம் தொடங்க மாா்க்சிஸ்ட்கம்யூனிஸ் கட்சியின் மாவட்டச் செயலா் செல்லசுவாமி முன்மொழிந்தாா். இதற்குஅனைவரும் சம்மதம் தெரிவித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

முதல்கட்டமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கனிமவளம் கடத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவேண்டும்.

கனிமளம் கடத்தல் தொடா்பாக மாவட்ட நிா்வாகம் பிறப்பித்த தடை உத்தரவை உயா்நீதிமன்றம் தடை செய்திருக்கும் வழக்கில் மேல்முறையீடு செய்து வாதியாக இணைந்து வழக்கில் தீா்வு காண வேண்டும். கடத்தல் லாரிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்வது மற்றும் புதிதாக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

கனிமவளம் கடத்தப்படுவதை தடுக்க அக். 5ஆம் தேதி தக்கலையில் தி.மு.க. தலைமைசெயற்குழு உறுப்பினா் ரெமொன் மனோதங்கராஜ் தலைமையிலிலும், புதுக்கடையில் கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ்.ராஜேஷ்குமாா் தலைமையிலும், குழித்துறையில் விளவங்கோடு எம்.எல்.ஏ. தாரகை கத்பா்ட் தலைமையிலும் சாலை மறியல் போராட்டம் நடத்த வேண்டும் என தீா்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில், திமுக மேற்கு மாவட்ட அவைத்தலைவா் மரிய சிசுகுமாா், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ரெமோன் மனோ தங்கராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜேஷ் குமாா்(கிள்ளியூா்), தாரகை கத்பா்ட்(விளவங்கோடு), குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினுலால்சிங், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் செல்லசுவாமி, மதிமுக அவைத்தலைவா் சிங், விடுதலைச் சிறுத்தைகள் மத்திய மாவட்டச் செயலா் மேசியா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.