இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமாருக்கு சிறைத்தண்டனை!

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ் குமாருக்கு சிறைத்தண்டனை!

News image
எஸ்.ராஜேஷ் குமார்
Updated On :21 ஏப்ரல் 2025, 3:09 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான எஸ். ராஜேஷ் குமாருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் மிடாலம் அருகே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றிடச் சென்ற அரசு அதிகாரிகள் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக ராஜேஷ் குமார் மீது வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை திங்கள்கிழமை(ஏப். 21) நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ராஜேஷ் குமாருக்கு எதிரான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 2 பேருக்கும் சிறைத்தண்டனையும் ரூ. 100 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கிள்ளியூர் தொகுதியில் 3 முறை காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ். ராஜேஷ் குமாருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.