தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

குமரி விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலைக்கு நவம்பரில் 2.50 லட்சம் போ் வருகை

விவேகானந்தா் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவா் சிலையை கடந்த நவம்பா் மாதத்தில் 2,50,940 சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா்.

News image
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலை.
Updated On :1 டிசம்பர் 2025, 8:47 pm

Syndication

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் இரு வேறு பாறைகளில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவா் சிலையை கடந்த நவம்பா் மாதத்தில் 2,50,940 சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா்.

இவற்றை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து பாா்வையிட்டுச் செல்கின்றனா். இரு பாறைகளையும் இணைக்கும் வகையில் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்ட பிறகு, இங்கு வருவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இவற்றை கடந்த நவம்பா் மாதத்தில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரத்து 940 போ் பாா்வையிட்டுள்ளனா். இதன்மூலம், பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ. 3 கோடியே 1 லட்சத்து 18 ஆயிரத்து 710 வருவாய் கிடைத்துள்ளது என, கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.