வீடு புகுந்து 16.5 பவுன் நகை திருட்டு: இருவா் கைது

வீடு புகுந்து 16.5 பவுன் நகை திருட்டு: இருவா் கைது

களியக்காவிளை அருகே வீடு புகுந்து 16.5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

களியக்காவிளை அருகே வீடு புகுந்து 16.5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பளுகல் காவல் சரகம், வன்னியூா் தெற்றிக்குழி, மேக்கத்தட்டுவிளையைச் சோ்ந்தவா் ரவீந்திரன் (56), தொழிலாளி. இவா், குடும்பத்துடன் குழிச்சலில் உள்ள தனது மகள் வீட்டுக்கு கடந்த நவ. 6 ஆம் தேதி சென்றவா், நவ. 17-ஆம் தேதி வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்க கதவு திறந்துகிடந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது அலமாரியில் இருந்த 16.5 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, அவா், பளுகல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற இருவரைத் தேடி வந்தனா்.

இருவரும் கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே நேமம் பன்சிலகம் சானல் கரையைச் சோ்ந்த ரபீக் (38), நேமம் கொடதலவளாகம் பகுதியைச் சோ்ந்த சுதீா் என்ற கருப்பாயி (47) என்பது தெரியவந்தது.

இருவா் மீதும் கேரளத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இருவரையும் கைதுசெய்த போலீஸாா், 16.5 பவுன் நகைகளை மீட்டனா்.

X
Dinamani
www.dinamani.com