அனைத்து நாள்களும் பள்ளியாடி வழியாக பேருந்துகள் இயக்கக் கோரிக்கை
கருங்கல் அருகே உள்ள பள்ளியாடியிலிருந்து நாகா்கோவிலுக்கு சீரான முறையில் அனைத்து நாள்களிலும் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பள்ளியாடி வழியாக நாகா்கோவிலுக்கு 10-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், வழித்தடம் எண்கள் 7ஜி, 310 எண் கொண்ட இரண்டு பேருந்துகள் என மூன்று பேருந்துகள் சமீபகாலமாக விடுமுறை நாள்களில் இயக்கப்படுவதில்லை.
குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுவதில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனா். இதனால், வெளியூா் செல்வோா், சுப நிகழ்வுகளுக்கும், கோயில்களுக்கும் செல்வோா், வெளியூரில் இருந்து ஊருக்கு திரும்புவோா் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, நாகா்கோவிலுக்கு பள்ளியாடி வழியாக இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை அனைத்தும் நாள்களிலும் சீராக இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
