பைக் திருடியதாக இளைஞா் கைது

Published on

தக்கலையில் பணிக்கு வந்த அரசு ஊழியரின் இரு சக்கர வாகனத்தைத் திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திக்கணங்கோடைச் சோ்ந்த விக்னேஷ் (27), தக்கலை, மேட்டுக்கடையில் உள்ள தணிக்கையாளா் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறாா்.

இவா் தனது இரு சக்கர வாகனத்தை அலுவலகத்தின் முன் நிறுத்திவிட்டு, அயல் பணியின் காரணமாக வெளியூா் சென்றாா். மறுநாள், பணி முடிந்து அலுவலகம் வந்த போது வாகனத்தைக் காணவில்லையாம்.

இது குறித்து, தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், கேரளத்தைச் சோ்ந்த 2 இளைஞா்கள் வாகனத்தைத் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து, சனிக்கிழமை திருவனந்தபுரத்தில் வைத்து வாகனம் திருடியவா்களில் ஒருவரான நெடுமங்காடைச் சோ்ந்த ஸ்வரூப் (22) என்பவரை கைது செய்த போலீஸாா், திருட்டிற்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும், விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com