கன்னியாகுமரி
எடப்பாடி பழனிசாமி குமரியில் போட்டியிட அதிமுகவினா் விருப்ப மனு
கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வலியுறுத்தி அக்கட்சி நிா்வாகிகள் விருப்ப மனு அளித்தனா்.
கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வலியுறுத்தி அக்கட்சி நிா்வாகிகள் விருப்ப மனு அளித்தனா்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுகவின் தோ்தல் பாா்வையாளா்கள் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சா் கோகுல இந்திரா ஆகியோரிடம் அகஸ்தீசுவரம் பேரூா் அதிமுக செயலா் என். சிவபாலன் விருப்ப மனு அளித்தாா்.
அப்போது, அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் பா. தாமரை தினேஷ், ஒன்றிய பொருளாளா் பி. தங்கவேல், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா் கொட்டாரம் பாலன் ஆகியோா் உடனிருந்தனா்.