கன்னியாகுமரி அருகே சிறுமி, இளைஞா் தற்கொலை
கன்னியாகுமரி அருகே காதல் விவகாரத்தில் இரு குடும்பத்தினரின் அவதூறு பேச்சால் பள்ளி மாணவியான 17 வயது சிறுமியும், இளைஞரும் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
கன்னியாகுமரி அருகேயுள்ள நேதாஜி காலனியை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநருக்கு 3 மகன்கள். இதில், 2ஆவது மகனான 18 வயது இளைஞரும், அதே பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவியான தூய்மைப் பணியாளரின் 17 வயது மகளும் காதலித்து வந்தனராம்.
இதனால், தூய்மை பணியாளருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு குடும்பத்தினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாம்.
இந்நிலையில், வியாழக்கிழமை ஆட்டோவில் வந்த அம்மாணவி குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மாணவி, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். மேலும், இதை அறிந்த இளைஞரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
கன்னியாகுமரி போலீஸாா், அவா்களது சடலங்களை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
