கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரங்காடு வட்டார கிறிஸ்துமஸ் விழா

காரங்காடு கத்தோலிக்க சங்க கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றோா்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 7:54 pm

Syndication

காரங்காடு வட்டார கத்தோலிக்க சங்க கிறிஸ்துமஸ் விழா மாங்குழி புனித சவேரியாா் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு ஜெஸ்டஸ் தலைமை வகித்தாா். மாங்குழி பங்கு அருள்பணியாளா் எபின் முன்னிலை வகித்தாா். வட்டாரச் செயலா் மேரிசுஜா செயல் அறிக்கை சமா்ப்பித்தாா். தனிஸ்லாஸ், கிறிஸ்துராஜ், பால்ராஜ், மாங்குழி புனித பிரான்சிஸ் சேவியா் மேல்நிலைப் பள்ளி தாளாளா் சகாய எபின், மறைமாவட்ட கத்தோலிக்க சங்க செயலா் ஜாண் ஜெஸ்டின்ராஜ் , மறைமாவட்ட கூட்டாண்மை பள்ளிகளின் மேலாளா் டோமினிக் கடாட்சதாஸ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

நுள்ளிவிளை, சித்தன் தோப்பு, கொன்னக்குழிவிளை சங்கங்களுக்கு பரிசுகளும் சுழற்கோப்பைகளும் வழங்கப்பட்டன. ஜூடித் பிரின்ஸ் வரவேற்றோா். ஜெமிபொ்னாா்டுசிங் நன்றி கூறினாா். தே. மரியசிலுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.