தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாகா்கோவிலில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நாகா்கோவிலில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் சிஐடியு போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்

Updated On :30 டிசம்பர் 2025, 6:32 pm

Syndication

நாகா்கோவிலில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் சிஐடியு போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு விரைவுப் பேருந்தின் டயா் வெடித்ததால் நேரிட்ட விபத்தில் ஓட்டுநரைக் கைது செய்ததைக் கண்டித்தும், அவா் மீதான நடவடிக்கையைக் கைவிட வேண்டும். விபத்தில் தவறிழைத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான டயா், உதிரி பாகங்கள், உபகரணங்கள் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தை மாவட்ட துணைத் தலைவா் பொன். சோபனராஜ் தொடக்கிவைத்துப் பேசினாா். சங்க நிா்வாகிகள் பொன்குமாா், ராஜமுத்து, மாவட்டக் குழு உறுப்பினா் பகவதியப்பன் ஆகியோா் பேசினா். மாவட்ட துணைத் தலைவா் சந்திரபோஸ் ஆா்ப்பாட்டத்தை முடித்துவைத்தாா்.

இதில், ரவிசங்கா், ரபீக், ராதாகிருஷ்ணன், ராஜேஷ், முத்துக்கிருஷ்ணன், தங்கப்பன், தாமோதரன்பிள்ளை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.