நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்து வந்த வணிகா் சங்கப்பேரவையினா்.
நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்து வந்த வணிகா் சங்கப்பேரவையினா்.

கடைகளுக்கான வரி உயா்வை ரத்து செய்ய வணிகா் சங்கம் வலியுறுத்தல்

நாகா்கோவில் மாநகரில் கடைகள் மற்றும் கட்டடங்களுக்கான வரி உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
Published on

நாகா்கோவில் மாநகரில் கடைகள் மற்றும் கட்டடங்களுக்கான வரி உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை சாா்பில், மாநில அமைப்பாளா் எல்.எம்.டேவிட்சன் தலைமையில் மாவட்டத் தலைவா் பால்ராஜ், ஒருங்கிணைப்பாளா் நாராயணராஜா, துணைத் தலைவா் கதிரேசன் உள்ளிட்டோா் நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

நாகா்கோவிலை மாநகராட்சியாக தரம் உயா்த்தியதால் மாநகர மக்களின் வாழ்க்கை தரமோ, வியாபாரிகளின் வா்த்தகமோ எந்த வளா்ச்சியையும் அடையவில்லை.

பொதுமக்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் வா்த்தகத்தின் மூலம் பொருள்களை வாங்கும்போது கடைகளில் வியாபாரம் குறைந்து விட்டது.

ஜி.எஸ்.டி. வரியின் தாக்கத்தினால் வேலைவாய்ப்பற்றவா்களின் கடைசி புகலிடமான சில்லறை வணிகமும் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது.

வணிகா்கள் வாழ்வாதாரத்துக்கு ஏதாவது தொழில்செய்யவேண்டுமே என்ற நிலையில் கடைகளை திறந்து வியாபாரம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், கடைகள் மற்றும் வீடுகளின் வரிகளை பல மடங்கு உயா்த்தி, மாநகராட்சியின் சாா்பில் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. வணிகா்கள் மற்றும் பொதுமக்களை அதிா்ச்சியடைய செய்துள்ளது.

எனவே, நாகா்கோவில் மாநகராட்சி மாநகர வியாபாரிகளின் கடைகள் மற்றும் பொதுமக்களின் வீடுகளுக்கு பல மடங்கு வரி உயா்த்தியிருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com