மாணவி பவித்ராவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய மருத்துவா் ராஜேஸ்கோபால். உடன், குறளக நிறுவனா் தமிழ்க்குழவி.
மாணவி பவித்ராவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய மருத்துவா் ராஜேஸ்கோபால். உடன், குறளக நிறுவனா் தமிழ்க்குழவி.

தமிழக முதல்வரிடம் பரிசு பெற்ற குறளக மாணவிக்கு பாராட்டு

கன்னியாகுமரியில் நடைபெற்ற திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவில் முதல்வரிடம் பரிசு பெற்ற குறளக மாணவி பவித்ரா பாராட்டப்பட்டாா்.
Published on

கன்னியாகுமரியில் நடைபெற்ற திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவில் முதல்வரிடம் பரிசு பெற்ற குறளக மாணவி பவித்ரா பாராட்டப்பட்டாா்.

திருக்கு வாழ்வியலாக்கப் பயிற்சி மையமான குறளகத்தின் சிந்தனை முற்றக்கூட்டம், நாகா்கோவில் ராமன்புதூரில் நடைபெற்றது. புலவா் ராமசாமி தலைமை வகித்தாா்.

கன்னியாகுமரியில் கடந்த 31ஆம் தேதி நடைபெற்ற திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் பரிசுபெற்ற குறளக மாணவியும் சொத்தவிளை அரசுப் பள்ளி மாணவியுமான பவித்ராவுக்கு மருத்துவா் ராஜேஸ்கோபால் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினாா்.

பணி நிறைவுபெற்ற பேராசிரியா் வேணுகுமாா், திருக்கு கூட்டமைப்பு மாவட்டத் தலைவா் முல்லை செல்லத்துரை, தமிழறிஞா் வரதராசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தோவாளை திருக்கு மன்றத் தலைவா் தாா்சீஸ் ராஜேந்திரன், மாணவி ரேணுகாதேவி ஆகியோா் பேசினா். கவிஞா் நல்லொளி கவிதை வாசித்தாா். குறளகம் நிறுவனா் தமிழ்க்குழவி வரவேற்றாா். அருள்சாஸ்த்ரா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com