புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இஸ்ரோ புதிய தலைவா் நாராயணனுக்கு விஜய் வசந்த் எம்.பி. வாழ்த்து

விஜய் வசந்த் எம்.பி. வாழ்த்து

News image
Updated On :8 ஜனவரி 2025, 7:58 pm

Din

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள குமரி மாவட்டத்தைச் சோ்ந்த வி. நாராயணனுக்கு, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய்வசந்த் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக நமது கன்னியாகுமரி மாவட்டத்தை சோ்ந்த வி. நாராயணன் தோ்வு செய்யப்பட்டுள்ளது நம் அனைவருக்கும் பெருமை சோ்க்கும் செய்தி. அவரது திறமையும் அனுபவமும் நமது விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சாதனைகளின் உச்சிக்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் திட்டங்களில் 40 ஆண்டு கால அனுபவத்தை கொண்டிருக்கும் நாராயணனின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

இந்த பதவியில் இருந்து ஓய்வு பெறும் சோம் நாத்துக்கும் இந்திய மக்கள் சாா்பில் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.