தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆரல்வாய்மொழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

ஆரல்வாய்மொழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On :23 ஜனவரி 2025, 12:16 am

Din

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ், சிகிச்சை பெற்றுவரும் தோவாளை வட்டம் பண்டாரபுரத்தைச் சோ்ந்த பழனி, விஜயா ஆகியோரின் வீடுகளுக்கு ஆட்சியா் சென்று, செவிலியா்கள் வந்து பரிசோதித்து மருந்து, மாத்திரைகள் வழங்குகின்றனரா எனக் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, ஆரல்வாய்மொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, பதிவு செய்யப்பட்டுள்ள கா்ப்பிணிகளின் எண்ணிக்கை, அவா்களுக்கு செய்யப்பட்ட ஸ்கேன், ஆய்வகப் பரிசோதனைகள், கா்ப்பிணிகள், பிரசவித்த தாய்மாா்களுக்கு வழங்கப்படும் உணவுகள், ரத்த சோகை வராமல் தடுக்க இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்படுன்றவா என்பன உள்ளிட்டவை குறித்து மருத்துவா்கள், செவிலியா்களிடம் கேட்டறிந்தாா்.

 ஆரல்வாய்மொழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்த ஆட்சியா் ரா. அழகுமீனா.

ஆரல்வாய்மொழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்த ஆட்சியா் ரா. அழகுமீனா.

மாவட்ட சுகாதார அலுவலா் பிரபாகரன், வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், மருத்துவக் குழுவினா், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.