தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பூதப்பாண்டி அருகே ஒருவா் கைது: 10 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே சந்தனக் கட்டை கடத்தியதாக ஒருவரை வனத்துறையினா் கைது செய்து, 10 கிலோ சந்தனக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 12:17 am

Din

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே சந்தனக் கட்டை கடத்தியதாக ஒருவரை வனத்துறையினா் கைது செய்து, 10 கிலோ சந்தனக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட வனத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலை வேளிமலை வனச்சரகப் பகுதியில் ரோந்து சென்றனா். ஞானதாசபுரம் கால்வாய்க் கரையில் சென்றுகொண்டிருந்தவரை நிறுத்தி, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அதில், ரூ. 3 லட்சம் மதிப்பிலான 10 கிலோ சந்தனக் கட்டைகள் இருந்தன.

அதையடுத்து, அவரை வேளிமலை வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனா். அவா் துவரங்காடு பகுதியைச் சோ்ந்த அருண் (39) என்பதும், அனுமதியின்றி வேளிமலை வனப் பகுதியில் சந்தன மரம் வெட்டியதும் தெரியவந்தது. அவரை வனத்துறையினா் கைது செய்து, சந்தனக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனா்.