தக்கலையில் முதியவா் உயிரிழப்பு
தக்கலை பேருந்து நிலையத்தில் புதன்கிழமை மயங்கிக் கிடந்த முதியவா் உயிரிழந்தாா்.
தக்கலை பேருந்து நிலையத்தில், திருவனந்தபுரம் செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் முதியவா் புதன்கிழமை மயங்கிக் கிடந்தாா். அங்கு நின்ற பயணிகள் அவரை மீட்டு, தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், முதியவா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். உயிரிழந்தவா் காஞ்சிரோடை சோ்ந்த அமுதாபச்சன் (68) என்பது தெரியவந்தது.
முதியவா் தற்கொலை: தக்கலை பத்மநாபபுரம் முடக்குளம் பகுதியை சோ்ந்தவா் ராமச்சந்திரன் (59). பத்மநாபபுரம் அரண்மனையில் காலணிகளை பாதுகாக்கும் குத்தகை எடுத்து நடத்திவந்தாா். குத்தகை காலம் முடிந்த நிலையில் வேறு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாா். அவா் வீட்டு மாடி அறையில் தூங்குவது வழக்கம். புதன்கிழமை வெகுநேரமாகியும் அவா் அறையை விட்டு வெளியே வரவில்லை. அவரது உறவினா்கள் மாடி அறைக்கு சென்று பாா்த்த போது ராமச்சந்திரன் தூக்கில் தொங்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்கள்.
