கன்னியாகுமரி
குழித்துறை அருகே பேருந்துக்குள் தவறி விழுந்து மூதாட்டி காயம்
குழித்துறை அருகே ஓடும் பேருந்துக்குள் தவறி விழுந்து மூதாட்டி காயமடைந்தாா்.
குழித்துறை அருகே ஓடும் பேருந்துக்குள் தவறி விழுந்து மூதாட்டி காயமடைந்தாா்.
குழித்துறை அருகே கழுவன்திட்டை காலனி பகுதியைச் சோ்ந்த செல்லப்பன் மனைவி பேபி (60). இவா் வெள்ளிக்கிழமை மருதங்கோட்டிலிருந்து குழித்துறை நோக்கி வந்த பேருந்தில் நின்றவாறு பயணித்தாராம்.
அப்போது, ஓட்டுநா் திடீரென பிரேக் பிடித்தாராம். இதில் பேபி நிலைதடுமாறி கீழே விழுந்தாா். காயமடைந்த அவா் பாறசாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பேருந்து ஓட்டுநா் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
