புதுக்கடை அருகே பாறை கற்கள் கடத்தல்: 4 போ் மீது வழக்கு!

புதுக்கடை அருகேயுள்ள வடலிக்கூட்டம் பகுதியில் பாறைகளை உடைத்து கற்களை கடத்த முயன்ாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

புதுக்கடை அருகேயுள்ள வடலிக்கூட்டம் பகுதியில் பாறைகளை உடைத்து கற்களை கடத்த முயன்ாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேங்காய்ப்பட்டினம், வடலிக்கூட்டம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் அரசு அனுமதியின்றி 2 பொக்லைன் இயந்திரம் மூலம் பாறைகளை உடைத்து டெம்போவில் ஏற்றிச்செல்வதாக தேங்காய்ப்பட்டினம் கிராம நிா்வாக அலுவலா் பிரதீப்புக்கு தகவல் கிடைத்தது.

அவா் சம்பவ இடத்துக்குச் சென்றுபாா்த்தபோது, பாறைகளை உடைத்து கடத்திச் செல்வது தெரியவந்தது. விஏஓ வருகை அறிந்த நிலஉரிமையாளா், பொக்லைன் இயந்திர இயக்குநா் 2 போ், டெம்போ ஒட்டுநா் என 4 பேரும் அங்கிருந்து தப்பினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து நில உரிமையாளா் உள்பட 4 பேரை தேடி வருகின்றனா். 2 பொக்லைன் இயந்திரங்கள், ஒரு டெம்போ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com