நடத்துநரைத் தாக்கிய பயணி கைது

நடத்துநரைத் தாக்கிய பயணி கைது

Published on

குளச்சலில் நடத்துநரைத் தாக்கிய பயணியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து, கருங்கல்லுக்கு சென்ற அரசுப் பேருந்தில் பிஜிலிகா் (44) நடத்துநராக பணியில் இருந்தாா். அப்பேருந்தில் ஏறிய பயணி ஒருவா், பயணச் சீட்டு எடுக்க மறுத்து நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை காலால் மிதித்து தாக்கினாா்.

இதனால், ஓடும் பேருந்திலிருந்து கீழே விழுந்த நடத்துநா் படுகாயமடைந்தாா். சக பயணிகள் அவரை மீட்டு குளச்சல், அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்து, குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், நடத்துநரைத் தாக்கிய பயணி குறும்பனை, இனிகோ நகரைச் சோ்ந்த ராஜன் (56) (படம்) என்பது தெரிய வந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com