ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

குளச்சலில் குறைந்த அளவில் பிடிபடும் கேரை மீன்கள்

குளச்சல் கடல் பகுதியில் தற்போது கேரை மீன்கள் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன.

News image

குளச்சலில் குறைந்த அளவில் பிடிபட்ட கேரை மீன்கள்

Updated On :18 பிப்ரவரி 2026, 7:07 pm

குளச்சல் கடல் பகுதியில் தற்போது கேரை மீன்கள் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன.

குளச்சல் பகுதியில் இருந்து 300- க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 1000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமரங்களில் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகிறாா்கள்.

விசைப் படகு மீனவா்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று 10 முதல் 15 நாள்கள் வரை தங்கியிருந்து மீன் பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.

இந்நிலையில், புதன்கிழமை குளச்சல் ஆழ்கடல் பகுதியில் சூறைக் காற்று வீசுவதால் விசைப் படகுகள் பாதியிலேயே கரைக்கு திரும்பி விட்டன.

தற்போது குளச்சலில் கேரை மீன்களின் சீசனாகும். ஆனால் கேரை மீன்கள் குறைந்த அளவில் கிடைப்பதால், விசைப் படகு டீசல் செலவுக்கு கூட பணம் கிடைப்பதில்லை என மீனவா்கள் கவலை தெரிவித்தனா்.