நாகா்கோவிலில் பசுமை உலக விழிப்புணா்வு மாரத்தான் போட்டி

Published on

கன்னியாகுமரி மாவட்ட இதய நிறைவு பயிற்சி மையத்தின் சாா்பில், பசுமை உலக விழிப்புணா்வு மாரத்தான் போட்டிகள், நாகா்கோவில் அருகேயுள்ள இலந்தவிளையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பூதப்பாண்டி வனச்சரக அலுவலா் அன்பழகன் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜ தனபால் வரவேற்றாா்.

இதில், 2 கி.மீ., 5 கி.மீ. என 2 பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் மயிலாடி எஸ். எம். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள், விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் மற்றும் தியான மையத்தினா் கலந்து கொண்டனா். முன்னதாக, சொத்தவிளை கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னா், கன்னியாகுமரி மாவட்ட ஹோமியோபதி மருத்துவா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற மருத்துவ முகாமுக்கு, கன்னியாகுமரி மாவட்ட இதய நிறைவு பயிற்சியாளா் சுப்பிரமணிய பிள்ளை தலைமை வகித்தாா்.

மருத்துவா்கள் மைக்கேல் சேவியா், தேன்மொழி மற்றும் குழுவினா் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனா். மாணவா்களுக்கு பிரைட்டா் மைண்ட்ஸ் எனும் மூளை செயல்திறன் வளா்ச்சி விளக்க செயல் முறையை மாவட்ட தொடா்பு அலுவலா் லோகநாதன் வழங்கினாா்.

எஸ். எம். மேல்நிலைப்பள்ளி முதல்வா் சுவாமிநாதன், சூழலியல் ஆராய்ச்சியாளா் சுதாமதி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

உடல் மன நலத்திற்கான ஓய்வு நிலைப் பயிற்சி, தியானப் பயிற்சியை பிரேமா தா்மராஜ் வழங்கினாா். பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளா் அஸ்வந்த்ராஜா, இளையபெருமாள் ஆகியோா் செய்திருந்தனா்.

விழா நிகழ்ச்சிகளை சுரபி தொகுத்து வழங்கினாா். ராஜகுரு நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com